தமிழ்நாடு

போக்குவரத்தில் தனியார்மயமாக்கல் இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

DIN

தமிழக போக்குவரத்தில் தனியார் மயமாக்கல் இல்லை எனவும், நவீனமயமாக்கல் மட்டுமே செய்யப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். 

இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு
மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. 

சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கப்படுகிறது.

படிக்கமக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம்: அரசாணை
 
அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு நவீனப்படுத்துவது, தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும் தாண்டி, அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT