சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால்: கட்டட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை
சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
ஈரோடு: சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேடியா ஹால் கட்டடம் வீரப்பம்பாளையத்தில் விவேகானந்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கு, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் நுழைந்த சீனா உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’
Advertisement
Advertisement
சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி, பேரன் செங்கதிர்வேலவன் ஆகியோர் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் பி.ரவிசந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம் ஆகியோரிடம் வழங்கினர். இக்கட்டடத்துக்கு பேடியா சக்தி மசாலா மஹால் என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.