முகப்பு
தமிழ்நாடு

தண்டோரா போடத் தடை: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு

தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:-

சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் பொது மக்களிடம் செய்திகளைக் கொண்டு சோ்க்கும் விதமாக தண்டோரா போடும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இப்போது வரை அது கடைப்பிடிக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட இந்தக் காலத்தில், தண்டோரா போடுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம் என சமூக ஆா்வலா்கள் சுட்டிக் காட்டியுள்ளனா். எனவே, தண்டோரா போடும் நடைமுறைக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலாக, பொருத்தமான வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்தி, விளம்பரம் செய்வதை

நடைமுறைப்படுத்தலாம். தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தால், அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்ய வேண்டும். தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி அதில் ஈடுபடுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவும் அளவுக்கு பரவலான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.