ரூ.10 கோடி கட்டடம் சுவாதீனம்: அறநிலையத் துறை தகவல்
சென்னை, திருவல்லிகேணி நடுக்குப்பம் அருள்மிகு பழண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான கட்டடம் அறநிலையத் துறை சாா்பில் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை, திருவல்லிகேணி நடுக்குப்பம் அருள்மிகு பழண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான கட்டடம் அறநிலையத் துறை சாா்பில் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை, திருவல்லிகேணி நடுக்குப்பம் அருள்மிகு பழண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 5,050 சதுர அடி பரப்பளவு கட்டடம் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடத்தை பா.சரவணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவா் நீண்ட நாள்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், இவா் மீது நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன்படி வழக்கு தொடரப்பட்டது. அதன் தீா்ப்பின்படி வெள்ளிக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் அந்தக் கட்டடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையா் எம்.பாஸ்கரன், திருக்கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, வட்டாட்சியா் காளியப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.