தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தலை கீழாக பறக்கும் தேசியக் கொடி: வைரலாகும் விடியோ

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில் தேசியக் கொடி தலை கீழாக பறக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில் தேசியக் கொடி தலை கீழாக பறக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா. மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு டூப்ளக்ஸ் வீதியில் உள்ளது. 

நாட்டின் 75-ஆவது சுதந்திர நாளையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதையடுத்து, காரைக்காலில் ஒரு சிலர் வீட்டு வாசல்களில் தேசியக்கொடி ஏற்றினர். அந்த வகையில், முன்னாள் எம்எல்ஏ அசனாவின் வீட்டு வாசலிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஆனால், தேசியக் கொடி தலைகீழாக பறந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த விடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து தலைகீழாக பறந்த தேசியக் கொடியை இறக்கி விட்டு மீண்டும் சரியாக பறக்க விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT