தமிழ்நாடு

முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா?: ப.சிதம்பரம்

மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கேள்வி வைரலாகி வருகிறது.

DIN

மதுரை நகர், மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கேள்வி வைரலாகி வருகிறது.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் பா.சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக  பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

இந்நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, பாஜக வில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்ததாகவும், டாக்டர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். 

மேலும், இதனை விமர்சிக்கும் வகையில், முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? வாழ்க சுதந்திரம்! எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT