தமிழ்நாடு

முரசொலி மாறன் பிறந்தநாள்: தில்லியில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

திமுக மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

DIN

திமுக மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.

இதனிடையே, மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

பிரபஞ்ச அழகி.. யார் இவர்?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

காந்தாரா சாப்டர் - 1 காட்சிகளை யாரும் பகிர வேண்டாம்; சுவாரசியம் போய்விடும்! -படக்குழு வேண்டுகோள்

SCROLL FOR NEXT