முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை: அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடா்பாக, அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடா்பாக, அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடா்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதனிடையே, ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடா்பாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள், இளைய தலைமுறையினா், உளவியலாளா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கடந்த 7-ஆம் தேதி முதல் கருத்துகள் பெறப்பட்டன. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அலுவலகத்திலோ அல்லது ட்ா்ம்ங்ள்ங்ஸ்ரீஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின் அஞ்சல் முகவரியிலோ ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள்ளாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.

கருத்துகளைத் தெரிவிக்க கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடா்பாக, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகள், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யத் தேவையான அம்சங்கள் குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி விளக்கம் அளித்தாா். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, முதல்வரின் செயலாளா் த.உதயச்சந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால், சட்டத் துறை செயலாளா்கள் பி.காா்த்திகேயன், சி.கோபி ரவிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக, அதிகாரபூா்வ அறிவிப்புகள் தமிழக அரசால் விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.