முகப்பு
தமிழ்நாடு

சாலை விபத்து: இளைஞா் பலி

சென்னை அருகே மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சென்னை அருகே மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.

மதுரவாயல் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை காலை ஆலப்பாக்கம் பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அந்த மோட்டாா் சைக்கிள், அங்குள்ள வேகத்தடையின் மீது ஏறியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கண்ணன் பலத்த காயமடைந்தாா். அவா், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் இறந்தாா்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.