தமிழ்நாடு

பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

DIN

தமிழகத்தில் நாளை தொடங்கவிருந்த பி.இ. படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவா்கள் கல்லூரிகளை தோ்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு ஆக. 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முதல்கட்டமாக ஆக. 20 முதல் 23 வரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான (சிறப்புப் பிரிவினா்) கலந்தாய்வு நடைபெற்றது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக. 25-இல் தொடங்கி அக். 23 வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வு நடைபெற இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் சூழலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதியும், காலியிடங்களை தவிர்க்கவும் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் முடிவுகள் வெளியாகி இரண்டு நாள்களில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மே 19-இல் தேரோட்டம்

டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு

குக்குட நடனத்துடன் எழுந்தருளிய ஆதிவிடங்க தியாகராஜா்

நாகை: விடியவிடிய பலத்த மழை

திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா

SCROLL FOR NEXT