தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வும் மையம்

DIN


தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை காலை  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல இடங்களில் இலேசான மழை பெய்தது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மருவமழை காலத்தில் தமிழ்நாடு பகுதியின் மேல் தொடர்ந்து வீசக்கூடிய மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், அதாவது டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த வரக்கூடிய 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவாரூ, தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT