தமிழ்நாடு

பாசி நிறுவன மோசடி வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

DIN

ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்ட பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் உள்ளிட்டோர் 2011-ல் தமிழகம் முழுவதும் 52,000 முதலீட்டாளர்களிடம் ரூ.930 கோடி வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மோசடி தொடர்பாக கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் சிபிஐ கைது செய்தது. கதிரவன் இறந்த நிலையில் மற்ற இருவருக்கும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு 12 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக 1,400 சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT