மதுரை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை அண்ணாநகரை அடுத்த தாசில்தார் நகரை சேர்ந்தவர் குமரேச பாண்டியன்(72). இவர் தனது மகளுடன் மும்பை செல்வதற்காக வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் காத்திருப்போர் அறையில் இருந்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பயணி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.