தமிழ்நாடு

'உங்கள் சொல்படியே நடக்கிறேன்..' முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உங்கள் சொற்படியே நடக்கிறேன், மேன்மேலும் வெல்ல என்னை வாழ்த்துங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

DIN

உங்கள் சொற்படியே நடக்கிறேன், மேன்மேலும் வெல்ல என்னை வாழ்த்துங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.  கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்ற அவர், இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 

இதனையொட்டி சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கருணாநிதியை வணங்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT