கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இறுதிவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தாா். மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், செப்டம்பர் 27ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் புதிய திட்டத்தை கொண்டுவந்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.