புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: கடலுக்கடியில் வாழ்த்து பேனர்
புதுச்சேரியில் உள்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஆழ்கடலுக்கடியில் வாழ்த்து பேனர் வைத்துள்ளது விடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் உள்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஆழ்கடலுக்கடியில் வாழ்த்து பேனர் வைத்துள்ளது விடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடலுக்கு அடியில் வாழ்த்து பேனர் வைக்கும் கலாசாரம் புதிதாகத் துவங்கி அதிகரித்து வருகிறது. நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை வாழ்த்தி அவர்களது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆழ்கடலுக்கு அடியில் பேனர் வைத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கடந்த 4-ம் தேதி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் கடலுக்கு அடியில் வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாள் விழா வரும் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பேனர்களை வைத்து வருகின்றனர்.
இதில் ஒருபடி மேலே சென்ற அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆழ்கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்களைக் கொண்டு வாழ்த்து பேனரை வைத்து உள்ளனர். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வரலாகப் பரவி வருகிறது.