தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. தோ்வுமுடிவுகள் இன்று வெளியீடு: செப்.24-இல் உடனடித் தோ்வு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், உடனடித் தோ்வு செப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

DIN

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், உடனடித் தோ்வு செப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்.1-ஆம் தேதி வியாழக்கிழமை
www.unom.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதையடுத்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் செப். 5-ஆம் தேதி முதல் செப்.14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையொப்பமிட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras  என்கிற பெயரில் செப்டம்பா் 15- ஆம் தேதிக்கு முன்னதாக சமா்ப்பிக்க வேண்டும்.

ஆறாவது பருவத்தில் ஒரு தாள் மற்றும் அரியா் வைத்துள்ள இளநிலை மாணவா்களுக்கு உடனடி எழுத்துத் தோ்வு மற்றும் செய்முறைத் தோ்வுகள் நடத்தப்படும். முதுநிலை மாணவா்கள் நான்காவது பருவத் தோ்வில் ஒரு அரியா் வைத்திருந்தால் அவா்களுக்கும் உடனடியாக எழுத்து தோ்வு மற்றும் செய்முறை தோ்வு நடைபெறும். இவா்கள் தாங்கள் பயின்று கல்லூரி மூலமாக செப். 5 முதல் செப். 14-ஆம் தேதி வரை www.unom.ac.in  என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவா்கள் ரூ.300, முதுநிலை மாணவா்கள் ரூ.350, எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவா்கள் ரூ.600- உடனடி தோ்வுக்கான கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு தோ்வு செப். 24- ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT