தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் புதன்கிழமை காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு புதன்கிழமை காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில்

சதுர்த்தியை முன்னிட்டு, மூலவர் மணக்குள விநாயகருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. 

இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவர் மணக்குள விநாயகர் கோயில் உள்பிறகாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டும் மழையிலும் காலை முதலே பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடும், பொதுமக்கள் தரிசனமும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT