சேலம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒப்பந்த மேற்பார்வையாளரின் உடல் உறுப்புகள், நான்கு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒப்பந்த மேற்பார்வையாளரின் உடல் உறுப்புகள், நான்கு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் மணிகண்டன் (26). பிகாம் பட்டதாரியான இவர், சேலம் சேகோ சர்வில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, கொண்டலாம்பட்டி ரவுண்டானா, அருகே வந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி மணிகண்டன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் சிலர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் சென்னையில் உள் தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று சிகிச்சை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக உடல் உறுப்புகளுக்கு காத்திருந்தவர்களுக்கு பொருத்தப்பட முடிவு செய்து, மணிகண்டனின் இருதயம், கண்கள், நுரையீரல், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றை எடுக்க மருத்துவ குழு வினர் முடிவு செய்தனர்.
இதனைதொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் மணிகண்டனின் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கிட்னியில் ஒன்று ஈரோட் டுக்கும் மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவைக்கும் அனுப்பி வைக்க வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் வழி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கிட்னி ஒன்று ஈரோட்டிற்கும், மற்றொன்று, சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. மகளின் உடல் உறுப்புகளை பார்த்து அவரது பெற்றோர்களும் உறுப்பினர்களும் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது