முகப்பு
தமிழ்நாடு

நெருங்கிவரும் மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கிவரும் நிலையில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

Updated On : 8 டிசம்பர், 2022 at 11:17 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:33 PM

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கிவரும் நிலையில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் மாண்டஸ் புயல் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது.  தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை(டிச.9) அதி கனமழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.