தமிழ்நாடு

சென்னையில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு!

DIN

சென்னை திருவான்மியூர் பகுதிகளில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். 

அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT