அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
தனியார் பால் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2017-ல் தொடர்ந்த இவ்வழக்கில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக பால் நிறுவனங்கள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். தரமற்ற பால் விற்கப்படுவதாக ராஜேந்திர பாலாஜி பேசியதாக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன.
இதையும் படிக்க: கொட்டும் மழையில் ரசிகர்கள்: லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்!
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.