தமிழ்நாடு

இதுவரை 394 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

தமிழகத்தில் இதுவரை 394 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

DIN

தமிழகத்தில் இதுவரை 394 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூா் ஆதி கேசவபெருமாள் கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 18 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள், குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குபின் திருப்பணிகள் நடைபெறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான சித்திரைக்குளம் மற்றும் பிற சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை 394 கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. திருநீா்மலை மற்றும் திருக்கழுகுன்றம் கோயில்களுக்கு ரூ.8 கோடி மதிப்பில் ரோப் காா் மற்றும் தானியங்கிகளின் சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ .குமரகுருபரன், மண்டல இணை ஆணையா் ரேணுகாதேவி, துணை ஆணையா் ஹரிஹரன், உதவி ஆணையா்கள் எம். பாஸ்கரன், ராஜா, அறங்காவலா்கள் சம்பத்குமாா், ராமானுஜம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT