தமிழ்நாடு

பாரதி ஆய்வுகளால் தமிழ் சமூகத்தை வலுவூட்ட வேண்டும் : கோ. பாலசுப்ரமணியன்

DIN

பாரதி குறித்த தொடர் ஆய்வுகளால் தமிழ் சமூகத்தை வலுவூட்ட வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன். 

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியை அறிமுகப்படுத்தி அவர் மேலும் பேசியது:  மகாகவி பாரதியார் விருதுபெறும் ஆ.இரா. வேங்கடாசலபதி, பிளஸ் 2 படிப்பை முடிக்கும் பருவமான 17 வயதிலேயே வஉசி கடிதங்கள் என்ற நூலைப் பதிப்பித்தவர். அவரது 40 ஆண்டுகால ஆய்வுத் தளத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் அளித்திருக்கும் ஆய்வுக்கொடை நூல்கள் 50}ஐத் தாண்டுகின்றன. 

பாரதியின் ஆய்வுகளைப் பொருத்தவரை மூல ஆவணங்களைக் கண்டறிதல், சரியான முறையில் பயன்படுத்தி பதிப்பித்தல், பாரதி படைப்புகளை ஆய்வு செய்தல் ஆகிய மூன்று பணிகளையும் ஒருங்கே மேற்கொண்டுள்ளார் வேங்கடாசலபதி. பாரதியின் சில கருத்துகளை விமர்சனம் செய்வதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாதவர். வேங்கடாசலபதி போன்றவர்கள் பாரதி குறித்த தொடர் ஆய்வுகளின் மூலம் தமிழ் சமூகத்திற்கு வலுவூட்ட வேண்டும் என்றார் கோ. பாலசுப்ரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT