தமிழ்நாடு

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!

DIN

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. 

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாள்களில் வலுவிழக்கும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த அக். 1-ஆம் தேதி தொடங்கியது முதல் தற்போது வரை 856 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இயல்பான மழை அளவு 736 மி.மீ.

மாண்டஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, இயல்பான மழை அளவை விட 3 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT