குன்னூரில் 30 செ.மீ மழை பதிவு: பல இடங்களில் மண் சரிவு!
குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நேற்று விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குன்னூரில் இதுவரை 30 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
கனமழை எதிரொலியாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.