தமிழ்நாடு

10 அமைச்சா்களின் துறைகளில் மாற்றம்

DIN

தமிழக அமைச்சரவையில் நான்கு அமைச்சா்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 அமைச்சா்கள் வகித்து வரும் பொறுப்புகளில் சில துறைகள் சோ்க்கப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன.

புதிதாக பொறுப்பேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.

இலாகா மாற்றம்: கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளா்ச்சித் துறையும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது. வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தனுக்கு வனத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பு: அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு கூடுதல் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அமைச்சா்கள் ஆா்.காந்தி, சு.முத்துசாமி ஆகியோரிடமிருந்து ஒருசில துறைகள் நீக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT