ஆறுமுகம் 
தமிழ்நாடு

திருடி திருடியே சிறைக்கு செல்வதில் சதமடித்த கோவை நபர்!

கோவையில் திருட்டு வழக்குகளில் நூறாவது முறையாக ஒருவர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவையில் திருட்டு வழக்குகளில் நூறாவது முறையாக ஒருவர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது நேற்று  பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது பிரகாசம் அருகே இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த சபிர், உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து தப்பிக்க முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(53) என்பது தெரியவந்தது.

ஏற்கெனவே இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர் திருட்டு வழக்கில் நூறாவது முறையாக சிறைக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT