காட்பாடி முதல் ஜோலாா்பேட்டை வரை செல்லும் தினசரி ரயில் டிச.14 முதல் பல்வேறு தினங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக டிச.17, டிச.31 ஆகிய தேதிகளில் இந்த ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியியிடப்பட்ட செய்தி: காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் (வண்டி எண்.06417) காலை 11.45 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும்.
மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பபடும் ரயில் (வண்டி எண்.06418) பகல் 2.40 மணிக்கு காட்பாடி வந்தடையும்.
இந்த ரயில்கள் டிச.14, 19, 21, 24, 26, 28 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் டிச.13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தற்போது டிச.17, 31 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.