தமிழ்நாடு

குடியிருப்புகளுக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது!

DIN

சென்னை அபிராமபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரம் பீமண்ணா கார்டனில் சுமார் 1000 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இன்று காலை அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று திடிரென தீப்பிடித்து புகைவந்துள்ளது. 

சிறிது நேரத்தில் டிரான்பார்மர் முழுவதுமாக தீப்படித்து கொளுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. டிரான்பார்மர் அருகேவே குடியிருப்புகள் இருந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

இது குறித்து மின்வாரிய அதிககாரிகளுக்கும்,  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மின்வாரிய ஊழியர்கள் மின் இனைப்பை துண்டித்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தீப்பற்றி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

காலை நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT