தமிழ்நாடு

சபரிமலையில் 35 நாள்களில் 23 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 35 நாள்களில் சுமார் 23.40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 35 நாள்களில் சுமார் 23.40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார நாள்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மண்டல பூஜைக்கு 5 நாள்களே உள்ள நிலையில் சபரிமலையில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க பக்தர்களை வழியில் தடுத்துநிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இணையதளத்தில் 24 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 23 லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT