ஓ.பன்னீா்செல்வம் 
தமிழ்நாடு

அரசு காலிப்பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை தேவை: ஓபிஎஸ்

அரசு காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

அரசு காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதைத் தொடா்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தோ்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 2023-ஆம் ஆண்டுக்கான அரசுப் பணித் தோ்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை பத்து பைசா என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியாா் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அரசைப் பொருத்தவரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. தனியாா் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்தும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் பல்வேறு அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன என்பது விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT