முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நாளை தில்லி பயணம் 

பிரதமர் மோடி தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் நாளை தில்லி செல்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் மோடி தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் நாளை தில்லி செல்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. தாயார் மறைவையடுத்து குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவிக்க முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் குஜராத் சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று மாலை தில்லி செல்வார் எனத் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் பிரதமர் மோடி தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் நாளை தில்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து தில்லி திரும்பவில்லை என்பதால் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →