தமிழ்நாடு

பிரதமர் மோடி தாயார் மறைவு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கற்பா

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(டிச.30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  வெளியிட்டுள்ள இரங்கற்பா, 

மழலையாய் பிறந்த மகனை...
பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான
மலை என பொது வாழ்க்கையில்
உயரச் செய்து... உலகிலேயே
உயர்ந்த மனிதராய் உயர்த்தி
தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா 
வலிமையை... உலகின் 
வலிய தலைவராம்...நம்
பிரதமருக்கு.. தற்போது மட்டுமல்ல
பிறந்ததிலிருந்து... அளித்துவந்த
அன்னை தீபம் அணைந்து விட்டது
எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு
எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்
எதையும் தாங்கும்
எப்போதும் உள்ள உறுதியை
இப்போதும் நம் இறைவன் நம்
பிரதமருக்கு அருளட்டும்...

என்று தனது ஆழ்ந்த இரங்கலை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT