தமிழ்நாடு

புத்தாண்டு: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் 

DIN


காரைக்கால் : புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமையென்பதால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார்.

இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கப்படியே பூஜைகள் நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி விழா 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, கோயிலில் பல இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் மூலம் தகவலை தெரிவித்துள்ளது.  எனினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் குறிப்பின்படி 2023 ஜனவரி மாதம் 17-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்றிருப்பதால், இதனை பின்பற்றுவோர் திருநள்ளாறு கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

வழக்கமாக சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்வர். 2023 புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமை என்பதால் 31-ஆம் தேதி அதிகாலை முதல் இக்கோயிலுக்கு தரிசனத்துக்காக ராஜகோபுரம் முன்பாகவும், வரிசை வளாகத்தின் வழியே கோயிலுக்குச் செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்கின்றனர்.

நளன் தீர்த்தக் குளத்திலும் பக்தர்கள் மிகுதியாக நீராடிவருகின்றனர். கோயில் நிர்வாகம் எதிர்பார்ப்பை மீறி பக்தர்கள் சனிக்கிழமை கோயிலுக்கு வந்துள்ளதால், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புவதில் பல மணி நேரமாவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருள்ளாறு பகுதியில் வாகனங்கள் மிகுதியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

SCROLL FOR NEXT