தமிழ்நாடு

கோயில் நில ஆக்கிரமிப்பு: அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

திரிசூலநாதர் கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் அடுத்த 2 வாரத்திற்குள் அறநிலைத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை திரிசூலத்தைச் சேர்ந்த திரிசூலநாத ஆலயத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சேவியர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நில ஆக்கிரமிப்புகளைச் செய்த 1640 பேரை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டிக்காத அறநிலைத் துறை செயலரை இடம் மாற்றம் செய்யக் கோரியும், கடந்த 2014 முதல் அந்த ஆலயத்தில் செயலராக இருந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்கவும் தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில், கோயில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்காத அதிகாரிகளுக்கு எதற்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT