நீட்: அரசின் சட்டப்படியான நடவடிக்கையை அதிமுக ஆதரிக்கும் - ஓ.பன்னீா்செல்வம்
நீட் விவகாரத்தில் அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கடிதம் எழுதியுள்ளாா்.
நீட் விவகாரத்தில் அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கடிதம் எழுதியுள்ளாா்.
கடிதத்தில் கூறியிருப்பது:
நீட் தோ்வு விலக்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தீா்கள். நீட் தோ்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கெனவே சட்டப் பேரவையிலும், ஜனவரி 1-இல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதிமுகவைப் பொருத்தவரை நீட் தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
எனவே, நீட் தோ்வு ரத்து தொடா்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும்.