கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேலும் ஒரு பிளஸ் 2 வினாத்தாள் கசிந்தது!

உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான இயற்பியல் வினாத்தாளும் கசிந்துள்ளது. 

DIN

உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான இயற்பியல் வினாத்தாளும் கசிந்துள்ளது. 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. 

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயிரியல் பாடத்தின் வினாத்தாள் நேற்று கசிந்த நிலையில், இன்று நடக்கும் வணிகக் கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது. முன்னதாக, 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

வினாத்தாள் கசிந்த பகுதிகளில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான இயற்பியல் வினாத்தாளும் கசிந்துள்ளது. 

இதையடுத்து தேர்வு எழுதும் மாணவர்களிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT