எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் வீட்டில் சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பரும் மாநில கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பரும் கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படைகளை அமைத்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா; 514 பேர் பலி
Advertisement
Advertisement
இந்நிலையில், வாக்காளர்களுக்கு தருவதற்காக பரிசுப் பொருள்களை இளங்கோவன் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.