அருப்புக்கோட்டை ஸ்ரீபழனியாண்டவர் கோவிலில் மாசிமகம் சிறப்பு வழிபாடு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் சுவாமி கோவிலில் வியாழக்கிழமை மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் சுவாமி கோவிலில் வியாழக்கிழமை மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் கோவிலில் மாசி மகம் நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பேரீச்சம்பழம், வாழைப்பழம், கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, தேன் கலந்த பஞ்சாமிர்தக் கலவையாலும், பன்னீர், சந்தனம், குங்குமம், கஸ்தூரி மஞ்சள், பால், உள்ளிட்ட 21 வகை சிறப்புப்பொருள்களாலும் ஸ்ரீபழனியாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு மலரலங்காரத்தில் அருள்மிகு பழனியாண்டவர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது உலக நன்மை வேண்டியும் தொற்றிலிருந்து உலக மக்களைக்காத்து தொழில், பொருளாதாரம், ஆயுளாரோக்கியம் மேம்படவும் சிறப்பு சங்கல்ப அர்ச்சனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.