சீர்காழி அருகே இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் வெடித்துச் சிதறிய பாய்லர். 
தமிழ்நாடு

சீர்காழி அருகே பாய்லர் வெடித்து இருவர் பலி; 3 பேர் காயம்

சீர்காழி அருகே பாய்லர் வெடித்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர். 

DIN

சீர்காழி: சீர்காழி அருகே பாய்லர் வெடித்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீன் விருந்து எண்ணை மற்றும் இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. 

இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.

இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா (25), பல்ஜித்ஓரான் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.  

வெடித்துச் சிதறிய பாய்லர்

இதனைக் கண்ட சக ஊழியர்கள் படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி (53), பந்தநல்லூர் மாரிதாஸ் (45), திருமுல்லைவாசல் ஜாவித் (29) ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள பாய்லர் ஆபரேட்டருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். 

பாய்லர் வெடித்துச் சிதறியதில் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள பாய்லர் ஆபரேட்டரிடம் விசாரணை நடத்தும் மருத்துவர்கள். 

சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT