முகப்பு
தமிழ்நாடு

கம்பத்தில் திமுக - அதிமுகவினர் இணைந்து பொங்கல் பரிசு வழங்கினர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை திமுக மற்றும் அதிமுக வினர் இணைந்து வழங்கினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் கூட்டுறவு சங்கத்தில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொங்கல் தொகுப்பு பரிசு பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை திமுக மற்றும் அதிமுக வினர் இணைந்து வழங்கினர்.

தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கம்பம் உத்தமபுரம் எம்.டி.  தனி 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் (திமுக), பொங்கல் தொகுப்பு பரிசுப்பொருள்களை குடும்ப அட்டைதாரர்ககளுக்கு வழங்கினார். உடன் கூட்டுறவு சங்கத் தலைவர் (அதிமுக ) ஆர்.ராஜாங்கம் கலந்துகொண்டு பொருள்களை வழங்கினார்.

நிகழ்வில் நகர திமுக செயலாளர் வக்கீல் நெப்போலியன், மற்றும் திமுகவினரும் அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க இயக்குநர்களும்  கலந்து கொண்டனர்

பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருளை திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து வழங்கியது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →