தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு இல்ல மேல்முறையீட்டு வழக்கு: இன்று தீர்ப்பு

DIN

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து, அதிமுக தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி அதிமுக ஆட்சியில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் தொடுத்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, அந்த அரசாணைகளை ரத்து செய்து கடந்த மாதம் தீா்ப்பளித்தாா்.

இதனை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமாா் சுகுமார குருப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை (டிச.20) விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதி தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் வாதிடப்பட்டது.

தீபா தரப்பில் மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன் ஆகியோா் ஆஜராகி, நாங்கள் தொடுத்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக முன்பு சேராத அதிமுக இப்போது மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை. ஏற்கெனவே, மெரீனாவில் நினைவிடம் உள்ள நிலையில், மீண்டும் ஒரு நினைவு இல்லத்தை மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யத் தேவையில்லை என்று வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல் முறையீடு வழக்கு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீப்பளிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT