நேரலையில் ஒளிபரப்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர்: விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் வரவேற்பு 
தமிழ்நாடு

நேரலையில் ஒளிபரப்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர்: விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

DIN

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று சூழல் காரணமாக ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் மட்டும் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வழக்கமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரானது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் பதிவு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல்முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுட்டுரைப் பதிவில், “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க. வரவேற்கிறது” என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT