தமிழ்நாடு

தேனியில் சேவல் சண்டை நடத்த அனுமதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

DIN

தேனியில் பொங்கல் அன்று சேவல் சண்டை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டு வருகிற நிலையில் தேனி உத்தமபாளையத்தில் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஜனவரி 17 அன்று நடைபெறும் சேவல் சண்டையில் சேவல்களின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கட்டக்கூடாது என்றும் சேவல்கள் உயிரிழக்காத வகையில் சண்டை நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT