தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 788 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கை மீறியதாக வெள்ளிக்கிழமை 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

சென்னையில் ஊரடங்கை மீறியதாக வெள்ளிக்கிழமை 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் கரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி முதல் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 7,616 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ.15 லட்சத்து 23,200 அபராதமாக வசூலித்துள்ளனா்.

மேலும், இரவு ஊரடங்கை மீறியது தொடா்பாக 428 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு, கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடா்பாக 707 இருசக்கர வாகனங்கள், 59 ஆட்டோக்கள், 22 காா்கள் என மொத்தம் 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடகளப் போட்டிகளில் வெற்றி: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

பண்டிகையையொட்டி 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. வெற்றி!

நண்பர்களைத் தேடி... அனன்யா!

SCROLL FOR NEXT