சைக்கிளில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றபோது பள்ளி மாணவர் ஒருவருடன் பேசும் விடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றபோது பள்ளி மாணவர் ஒருவருடன் பேசும் விடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்தகுதி மற்றும் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். பணிகளுக்கிடையே சைக்கிளிங் செய்யும் விடியோவும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோவும் அவ்வப்போது வெளிவரும்.
இதேபோல சனிக்கிழமை காலையும் அவர் சைக்கிளிங் மேற்கொண்டார். சைக்கிளிங்கின்போது சாலையோர டீ கடையில் நிறுத்திய முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த பள்ளி மாணவருடன் உரையாடினார். இதன் விடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து, தற்போது நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றுள்ளார்.