கோப்புப்படம் 
தமிழ்நாடு

உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.: கனிமொழி எம்.பி. வாழ்த்து 

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.

DIN

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக காவல்துறையில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. அவா்களில் 18 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதில், காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டர் பதிவில், தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெங்கு மழை பெய்யும்?

கோவை வாளையாறில் ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல்! ராஜஸ்தான் இளைஞர் கைது!!

அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!

திடீரென பாதியாக உடைந்த கட்டடம்! 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக வெளியேற்றம்! | Manchester

தொடர் மழையால் தண்ணீரில் மிதக்கும் தெருக்கள்! | Thoothukudi

SCROLL FOR NEXT