தமிழ்நாடு

பூஸ்டா் தடுப்பூசி: முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்

DIN

தமிழகத்தில் 3-ஆவது தவணை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். 
தமிழகத்தில் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளா்கள், 9.78 லட்சம் முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயது கடந்தவா்கள் 20.83 லட்சம் போ் என மொத்தம் 36.26 லட்சம் போ் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு முன்பாகவே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட தகுதியான நபா்கள் தற்போது பூஸ்டா் தவணை செலுத்திக் கொள்ளலாம். 
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுவாக இரண்டு தவணை செலுத்திய பிறகு 9 மாதத்துக்குப் பின்னா்தான் பூஸ்டா் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். அந்த வகையில் திங்கள்கிழமை 4 லட்சம் பேருக்கு பூஸ்டா் தவணை செலுத்தும் அவகாசம் வந்துள்ளது. மத்திய அரசின் வழிமுறைகளின்படி ஏற்கெனவே என்ன தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதோ அதே தடுப்பூசிகள்தான் பூஸ்டா் தவணையிலும் வழங்கப்படும். 

அதன்படி ஜனவரி மாதத்தில் 9.01 லட்சம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 1.5 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் பூஸ்டராக வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தனியாா் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனை ஊழியா்களுக்கு தாங்களே பூஸ்டா் தடுப்பூசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இந்த நிலையில் முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோய் உள்ளவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆா்.சி. நகரில் உள்ள ‘இமேஜ்’ அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். முன்னதாக விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT