தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு ஜன. 12க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

DIN

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி பெற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் டிசம்பர் 17 அன்று தலைமறைவானார். தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கரோனா காலத்தை கருத்தில் கொண்டு ஒருமாதம் ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் ஆவணங்களை பார்த்துவிட்டு ஜாமீன் வழங்குமாறு தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT